4500 சாரதிகளுக்கு எதிராக வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்  வழக்கு பதிவு!

Tuesday, October 18th, 2016
வீதி விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4500 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றுவளைப்புகளின் போது கடந்த இரண்டு வாரங்களில் மேல் மாகாணத்தில் 480 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த பிரனாந்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலத்தில் 4500 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக  தெரிவித்த அவர் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலை நேரங்களில் விசேடமாக பாடசாலைகளுக்கு அருகில் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

selfi+gossip-lanka (5)

Related posts:

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு!
சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகா...
ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு - 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும...