சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Tuesday, November 8th, 2022

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், 9 மாவட்டங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் ஒரு வீடு முழுமையாகவும் 161 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

"தீடையில்" தங்கியிருந்து  தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் -ஈ.பி.டி.பியின் மன்னார...
18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அமர்த்த வேண்டாம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டம...
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்...