18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அமர்த்த வேண்டாம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Wednesday, July 21st, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியமை தொடர்பிலும், அவரின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளைக் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்காக, தொழில் பயற்சி நிலையம் ஊடாக தொழில் பயிற்சி திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: