சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்!

Friday, June 3rd, 2016

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது.

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது

Related posts:


அம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் சில்லு சறுக்கி விழுந்ததில் முதியவர்...
யாழ் மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – யாழ்.மாவட்ட செயலகம் அறிவிப்பு!
வெளிநாட்டு கையிருப்பு 3.6 டொலர் பில்லியன்களாக உயர்ந்துள்ளது - அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவிப்பு!