குடாநாட்டில் 81 ஹெக்ரேயரில் மிளகாய்ச் செய்கை!

Tuesday, November 13th, 2018

குடாநாட்டில் இந்த வருடம் காலபோக மிளகாய்ச் செய்கையின் போது 81 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் விவசாயிகள் செய்கையில் ஈடுபட்டனர் என்று யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

எழுதுமட்டுவாழ், கைதடி, விடத்தல்பளை, கரவெட்டி, புலோலி ஆகியவற்றிலும் இந்த கால போக மிளகாய்ச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டனர் என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. மிளகாய்ச் செய்கைக்கு ஏற்றவாறு காலநிலை நிலவுவதால் விளைச்சலும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் காணப்பட்டது

அநேகமான செய்கையாளர்கள் சுப்பர், எம் ஜ கிறீன், எம்.ஜ.சீ.எச் 3 ஆகிய இனங்களைப் பயிரிட்டுள்ளனர். இதில் சுப்பர், எம்.ஜ.சி.எச் 3 இனங்களைச் சேர்ந்த மிளகாய்க் கன்றுகளில் இருந்து அதிகளவான விளைச்சல் பெறப்பட்டுள்ளது. அதிகளவிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால்தான் இந்த வருடம் பச்சை மிளகாய்க்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று விவசாயத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: