சிறுவன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் 3 ஆம் தவணை விடுமுறை - பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு ...
அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்ப...
|
|