சிகரட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!
Thursday, November 10th, 2016
புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு 500 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுகான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாசிப்பின் போதே இதை குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் சிகரட்டின் விலை மற்றும் சிகரம் உற்பத்திப் பொருட்களுக்கான விலை என்பன அதிகரிக்கப்பட்டன.
சிகரட் பாவனையாளர்களை முற்றிலுமாக அதிலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் சிகரட் பாவனையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த வரவுசெலவுத்திட்டம் மேலும் இடியை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!
|
|
|


