தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் தொடங்கியுள்ளனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, February 12th, 2021

தொழில்நுட்பக் கல்லூரிகளை வலுப்படுத்தி எமது இளம் சமுதாயத்தினரை அதனூடாக சிறந்த தொழிற்திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதனூடாக அவர்களுக்கு தொழில்துறைசார் கல்வியை வழங்கி ஒரு சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்ப்பதற்கான வழிவகைகளை பெற்றுக்கொடுப்பதே தமது எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் வகையில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் வழிகாட்டல் மற்றும் தலையீட்டின் கீழ் ரூபாய் 420 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆணைமடு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் புதிய கட்டிடத் தொகுதி என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களின் பாவனைக்காக நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

நாட்டில் இன்று தொழில்நுட்பக் கல்லூரிக்கான பாரிய கேள்வி உள்ளது. தொழிற்பயிற்சிக்கான பெரும் தேவை உள்ளது. ஏனெனில் தொழில்நுட்பக் கல்வி கற்றவர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும்போது ஒரு சிறப்பு கிடைக்கிறது.

ஒரு காலத்தில் பணிப்பெண்களை அனுப்பும் நாடு என்று நம் நாடு அறியப்பட்டது. அந்நிலை இன்று இல்லாது போயுள்ளது.  நமக்கு இன்று பயிற்சி பெற்ற திறமையான தொழிலாளர்களை அனுப்ப முடிந்துள்ளமை அதற்கு ஒரு காரணமாகும். திறமையான தொழிலாளர்களை முறையாக அனுப்புவதன் மூலம், அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் ஒரு பெரிய வருமானத்தையும் சம்பாதிக்க முடிந்தது.

அத்துடன் தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் விற்பனையின் மூலம் பெற்றதைவிட இன்று நம் இளைஞர் யுவதிகள் வெளிநாட்டிற்கு சென்று அனுப்பும் பணத்தின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியே அதிகமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம் இன்று அனைத்து பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்கள். அதற்கு சமமான கல்வியைப் பெறுவதற்கு தொழில்நுட்பக் கல்லூரிகள் தோன்றியவுடன், பலரும் அதில் இணைந்து கல்வி கற்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அதிகம் வரவில்லை. ஆனால் இப்போது இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணைந்து கல்வி பயின்று வெளியேறி வருகின்றனர்.

கடந்த காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமக்கு இந்த முதலாவது பணி பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதே ஆகும். அதனால் நாம் அதனை செய்தோம். பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வழிசெய்ததன் பின்னர் தற்போது எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே தற்போது எமக்குள்ள பொறுப்பாகும்.

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுத்தாலேயே சிறந்த பிரஜைகளை உருவாக்கி, நாட்டிற்கு செயற்திறன்மிக்க பிரஜைகளை தோற்றுவித்து வருமான மார்க்கங்களை உருவாக்குவது சாத்தியமாகும்.

எனவே, இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: