சாலையில் சென்ற தம்பதியிடம் தாலிக்கொடி பறிப்பு!
Wednesday, February 1st, 2017
சாலையில் கணவனுடன் சென்ற மனைவியின் 6 பவுண் நிறையுடைய தாலிக் கொடியை மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர் அறுத்துச் சென்றனர் என்று பொலிஸில் முறையிடப்பட்டது.
சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார்200 மீற்றர் தூரத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த குடும்பத்தினர் உறவினரின் இறப்பு நிகழ்வுக்குச் சனெ;று திரும்குபும் போது இராச பாதையில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர்களைப் பின் தொடர்ந்த கொள்ளையர், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று தாலிக்கொடியை அறுத்து கொண்டு வந்தவேகத்தில் தப்பித்து விட்டனர் என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

Related posts:
பொலிஸாருக்கு கஞ்சா விற்ற நபர் கைது!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!
தகுதி இல்லாதவர்களை நீக்குங்கள் – ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
|
|
|


