எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

Monday, January 2nd, 2017

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 4 வருடங்களுக்காக 17லட்சம் மெட்ரிக்தொன் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது எனவும் கூடடுத்தாபனத்தின் தலைவர் டி.ஜி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் வீதத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எரிபொருளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. சப்புகஸ்கந்த, முத்துராஜவல, கொலன்னாவ பகுதிகளில் மேலதிக எண்ணெய்த் தாங்கிகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

petrol-price-iol-oil

Related posts:

20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்ற...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தகவல...