சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் – எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தகவல்!

Monday, September 18th, 2023

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என 45 சதவீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என 28 சதவீதமானவர்கள் மாத்திரமே நம்புவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 1,008 பேரிடம் வெரிடே ரிசர்ச் நிறுவனம் கருத்துக்களை சேகரித்திருந்தது.  இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை இப்போதும் எதிர்காலத்திலும் எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கிடைக்கப்பெற்ற பதில்களுக்கமைய. முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.  குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டதாக வெரிடே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: