சர்வதேச வெசாக் தின முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்.
Tuesday, May 9th, 2017
சர்வதேச வெசாக் தினநிகழ்வுகள் இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நேபாளபிரதமர் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ள சர்வதேசவெசாக் தின நிகழ்வுகளில் 80 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுகளை கருத்தில் கொண்டு விஷேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்கவேண்டு மெனவும் அரசு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இம்மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேசவெசாக் தினநிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் புத்தசாசனங்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.நகரில் உள்ள 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும்!
நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அமைச்சர் விது...
|
|
|


