பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Friday, April 9th, 2021

பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது அலை தாக்காம் தோற்றம் பெறாத வகையில் அவதானத்துடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

பண்டிகை காலங்களில் வணிக நடவடிக்கையில் ஈடுபடும்போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மிகவும் அவசியம்.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்போது, கொவிட்-19 நிலைமை மோசமடைந்துவிட்டால் அது நாட்டை மேலும் தனிமைப்படுத்தி பொருளாதார ரீதியான பல்வேறு தாக்கங்களுக்கு உட்படுத்தும்.

இக் காலப் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள் மற்றும் அண்மையில் அறுவை சிகிச்சை செய்த நபர்களை நெரிசலான இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: