முன்பொரு காலத்தில் நாட்டில் கூட்டுறவு தான் ஏக போக உரிமையைக் கொண்டிருந்தது: யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சி. குமாரலிங்கம்!

Tuesday, August 2nd, 2016

முன்பொரு காலத்தில் நாட்டில் கூட்டுறவு தான் ஏக போக உரிமையைக் கொண்டிருந்தது. சமூக அபிவிருத்தி மன்றங்களும், சிக்கனக் கூட்டுறவுச் சங்கம் போன்ற நிதி நிறுவனங்களும் மக்களுக்குக் கடன்களை வழங்கி  மக்களை மேல் நிலைக்கு நிலைக்குக் கொண்டு வந்தது எனத் தெரிவித்தார்  யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சி. குமாரலிங்கம்.

யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் 94 ஆவது கூட்டுறவு தின விழா கடந்த சனிக்கிழமை(30) கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள சங்கக் காரியாலயத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போது  பல தனியார் நிறுவனங்களும் வீடு வீடாகச் சென்று கடன்கள் வழங்குகின்றன. இரவு-11 மணி வரை குறித்த நிறுவனங்கள் தாம் கொடுத்த கடனை வசூலிப்பதாக நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்திருந்தது.  இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஆகவே, தனியார் நிதி நிறுவனங்கள் உங்கள் வீடுகளுக்குத் தேடி வந்து ஆசை வார்த்தை கூறிக் கவர்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் போன்ற கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் பயனடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts: