கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023

2008 ஆம் முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த சுமார் ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட கண்டி இராச்சிய காலத்தைச் சேர்ந்த 6 தொல்பொருட்களை மீள நாட்டிற்கு கொண்டுவரும் வாய்ப்பும் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் குறித்த அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து, குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாக கொண்டு தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இதேவேளை, தொல்பொருள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு ஒரு தொகையினை வழங்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: