யாழ்.நகரில் உள்ள 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும்!
Wednesday, January 18th, 2017
யாழ்.நகரிலுள்ள 44 குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளுக்கு முன்பாக முதற்கட்டமாக 14 குளங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள யாழ்.மாநகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்குளங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன் முன்னேற்பாடாக நீர்வளச் சபையினால் குளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுப் பணிகளின் பொது முதற்கட்டமாக 14 குளங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஏனைய குளங்களின் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இந்த 44 குளங்களும் மக்களை கவரும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Related posts:
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவி...
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் - பிரதமர் அலுவலக...
பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
|
|
|


