பரீட்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானம் – கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு!

Monday, October 5th, 2020

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஏற்பட்டதனால் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது என்றும், கொழும்பு மாவட்டத்தில் பகுதி நேர வகுப்புகளுக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.

பரீட்சைகளுக்கான திகதிகள் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது.

அத்துடன், 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும் , கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 6ஆம் திகதிவரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: