சட்டவிரோத மின்சாரம் பெற்ற 7 பேர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்மானிக்குள் கம்பியை வைத்து மின்மானியின் வாசிப்பை குறைத்துக்காட்டிய குற்றச்சாட்டில் இருவரும் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவரும் நேற்று திங்கட்கிழமை (14) காலையில் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற 4 பேர் கடந்த ஞாயிரன்று(13) இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கொழும்பு, இலங்கை மின்சார சபையிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
தாவடியில் வழிப்பறி!
இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க துரித நடவடிக்கை - அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தடவையாக கூடுகிறது தேசிய சபை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்...
|
|
|


