கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 110 பேர் உட்பட வடக்கில் 164 தொற்றாளர்களாக அடையாளம்!

Tuesday, August 10th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் யாழ். மாவட்டத்தில் 110 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 164 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதானா மருத்துவமனை,யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் 359 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 128 பேருக்கு தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 33 பேரும், மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 17 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் 13 பேரும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரும், வேலணை மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேரும் கோப்பாய் பிரதேச மருத்துவ மனையில் 6 பேரும், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 4 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இருவரும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும், நொதேர்ன் சென்ரல் மருத்துவமனையில் ஒருவரும் என 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று, வவுனியா மாவட்டத்தில் வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், புளியங்குளம் பிரதேச மருத்துவமனையில் 5 பேருக்கும் வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவருக்கும், செட்டிகுளம் ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும் என 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், பொது மருத்துவமனையில் ஒருவர், தருமபுரம் பிரதேச மருத்துவமனையில் மூவர், பளை பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், மன்னார் மாவட்டத்தில், பொது மருத்துவமனையில் 4 பேருக்கும் நானாட்டான் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் 197 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில், இருவருக்கும் என 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் வடக்கில் 36 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். அத்துடன் வசாவிளான் தனிமைப்படுத்தல் முகாமில் 9 பேருக்கும், பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: