ஒவ்வொரு வார இறுதியிலும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வந்து சேரும்!

Wednesday, July 6th, 2016

மக்களது முக்கியமான பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று (6) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் அன்றாடம் நுகரக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை ஒவ்வொரு வார இறுதியிலும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறியப்படுத்தும் புது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றி சோதனை நடத்தி தெரிந்து கொள்வதற்காக ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பிரிவினரால் நியமிக்கப்பட்ட பொலிஸாரே குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர்,  பிரதமருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறாக ஏதேனும் பகுதிகளில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால் அதை மக்கள் அறிவிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெளிவுபடுத்தினார்.

Related posts: