கோப் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில்!
Tuesday, August 9th, 2016
கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியினால் இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் விபரங்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் 19 அரச நிறுவனங்கள் சார்ந்த விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Related posts:
யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...
மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு - வடமராட்சியில் சம்பவம்!
பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு தேர்தல்...
|
|
|


