கொழும்புக்குக் கடத்தப்படவிருந்த இரண்டு இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!
Wednesday, October 5th, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கடத்தப்படவிருந்த இரண்டு இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ 990 கிராம் இந்திய கேரளகஞ்சாப் பொதிகளுடன்நேற்றுச் (05) யாழ்.மடத்தடியினைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். முடவர் சந்திக்கு அண்மையில் வைத்துக் குறித்த நபர் கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts:
A-9 வீதியில் விபத்து ஐவர் படுகாயம்!
பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
|
|
|


