A-9 வீதியில் விபத்து ஐவர் படுகாயம்!

Wednesday, July 11th, 2018

இன்று அதிகாலை வவுனியாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம் – இராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற வாகனமும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Related posts:


பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தலைமையகம் நிர...
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் - சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத...