தனியார் மருந்தகத்தின் பணிப்பாளருக்கு மறியல்!

Saturday, November 5th, 2016

பொலிஸ் அலுவலர்களையும் வைத்திய அதிகாரியையும் கடமையை செய்ய விடாமல் அவதூறாக நடந்து கொண்ட கொழும்பு தனியார் மருந்தகப் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவருடன் உதவியாக நின்றவரை பிணையில் விடுவிக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டார். சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை, இருவரும் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததால் அயல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் தமக்கு இடைஞ்சல் ஏற்படுவதாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குத் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் அங்கு சென்றபோது அவர்களைக் கடமை செய்ய விடாமல் தனியார் மருந்தகப் பணிப்பாளர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவரையும் அவரது உதவியாளரையும் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ள அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்யச் சென்ற வைத்திய அதிகாரியையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக வைத்திய அதிகாரி தனது அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் சாவகச்சேரி பொலிஸார் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான், குற்ற முறையான பலாத்காரம் மேற்கொண்டமைக்காகப் பணிப்பாளரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அந்தக் காலப் பகுதியில் தெல்லிப்பழை குடி வெறுப்பு நிலையத்தில் சிகிச்சைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியகட்சருக்கு உத்தரவிட்டார். இவருடன் கைது செய்யப்பட்ட நபர் மது போதையில் காணப்படாத நிலையிலும் இவரது உடலில் மதுவின் வாசம் காணப்படுவதாக வைத்திய அதிகாரி அறிக்கையிட்டுள்ளதையடுத்து 50ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.

maxresdefault

Related posts: