எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது – தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024

அரசியலமைப்புச் சட்டத்தில் கால வரையறை விதிக்கப்பட்டுள்ள ஒரே தேர்தல் ஜனாதிபதி தேர்தல் எனவும் இதனால்,எக்காரணம் கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய தேர்தல்களை நடத்துவது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியான அதிகாரங்கள் இல்லை.

உதாரணமாக பிரதேச சபைகளின் பதவிக்காலம் நான் ஆண்டுகள் எனக்கூறப்பட்டாலும் துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு அவசியமாயின் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்னர் நடத்தலாம். அத்துடன் பிரதேச சபையின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம்.

அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என கூறப்பட்டாலும் ஜனாதிபதிக்கு தேவையானால் இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும்.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் அப்படியல்ல.அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்.அதனை நீடிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை.

இதனடிப்படையில், இந்த வருடம் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் கட்டாயம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஊடாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கற்பனை கதை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்;

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியிருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு குறுகிய வழிகள் எதுவுமில்லை. அது நீண்ட செயற்பாடு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது – பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவு காண்பதே தமது நோக்கம் - அமைச்சர் ந...
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...