சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது – 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு!
Saturday, September 4th, 2021
இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், குறித்த போலி விண்ணப்பப் பத்திரமானது சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்படவில்லை.
எனவே இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்ற...
கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்படும் - சுகாதார அமைச்சு உறுதி!
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...
|
|
|


