360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 22nd, 2020

ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் சுமார் மாவட்டத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூகத்தொற்று நிலைக்கு வரவில்லை என எவரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது –

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 இலட்சம் வரையிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கே குறித்த வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அபாய நிலைமை நீங்கமுன்னர் ஊரடங்கு சட்டம் நீக்குவது ஏற்றதல்ல எனவும் வலியுறுத்தியிருந்தோம். எனினும் எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் ஒரு ஆபத்தான ஒன்றாகவே கருத கூடியதாக உள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி காண்டீபன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை - வணிகர் சங்கம்!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்...
எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி...