உயர்தரப் பரீட்சை: மோசடி செய்த 185 மாணவர்கள்!

Friday, August 19th, 2016

இம்முறை நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாடசாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில் தோற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது.

போலியான முறையில் அடையாள அட்டைகளை தயாரித்து இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையக் காரியாலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியரில் பலர் அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் பாடசாலைகளில் பதியப்பட்டவர்கள்.கல்வி நடவடிக்கைகள் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவது மிகவும் ஆபத்தான ஓர் நிலைமையாகும்.

சாதாரண தரப் பரீட்சை ஒரு மாவட்டத்திலும் உயர் தரப் பரீட்சை மற்றுமொரு மாவட்டத்திலும் தோற்றினால் அந்த இரண்டு மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் அதிகளவு வெட்டுப் புள்ளி காணப்படுகின்றதோ அந்த மாவட்டத்தின் வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் மாணவர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டத் திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென குறித்த அமைப்பு கோரியுள்ளது.

Related posts:

இரண்டு வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!
மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப...
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - நித...