கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

Wednesday, December 2nd, 2020

நாட்டில் மேலும் 545 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 541 பேர் திவுலபிட்டிய ௲ பேலியகொட கொத் தணியில் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இவ்வாறு அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, திவுலபிட்டிய ௲ பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 983ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 4 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 532 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 485 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 002 ஆக அதிகரித் துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 593பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் குணமடைந் தவர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்து 817 ஆக உயர்ந் துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 620 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது

Related posts: