‘உசாவிய நிஹண்டய்’ திரைப் படத்தின் தடை உத்தரவு நீங்கியது!

Friday, October 21st, 2016

‘உசாவிய நிஹண்டய்’ எனும் இலங்கையில் எடுக்கப்பட்ட சிங்கள மொழி மூலமான திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பிரசன்ன விதானகேவினால் எடுக்கப்பட்ட நீதிமன்றம் அமைதி எனும் அர்த்தத்தைக் கொண்ட குறித்த திரைப்படம், நீதிபதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு சம்பவத்தை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திரைப்படம் தன்னை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து, முன்னாள் நீதிபதி லெனின் ரத்நாயக்கவினால் திரைப்படத்தை தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த திரைப்படத்திற்கு, ஒக்டோபர் 05 ஆம் திகதி, (ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை) நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நேற்றைய தினம் (20) இது குறித்தான வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்ததோடு, நீதிமன்றத்தின் முன்னால் குறித்த தடை உத்தரவுக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று (21) குறித்த திரைப்படத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தார் விதிக்கப்பட்ட தடை உத்தரவை அந்நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

1976511127727_10152983605793049_1379536912301404833_n-600x356 (1)

Related posts: