குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் – அர்ஜூன் மகேந்திரன்!
Saturday, October 29th, 2016
குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக வெளியான தகவல்கள் குறித்து ஊடகமொன்று நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அர்ஜூனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் தாம் மீளவும் நாடு திரும்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளையும் எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோப் குழு நேற்று பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


