குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றங்கள் : மக்கள் 6 மணியுடம் வீடுகளுக்குள் முடங்கும் நிலை –  அரச அதிபர் கவலை

Thursday, April 28th, 2016
யாழ்ப்பாணத்தில உள்ள பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பொலிஸ் நிலையங்களில் சென்று முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றார்கள் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதனால் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை அறிந்த கொண்டும் பொலிஸாரிடம் முறையிடாமல் இரவு 6 மணியுடனே வீடுகளுக்குள் மக்கள் முடிங்குகின்ற நிலமையும் இங்கு காணப்படுகின்றது என்றும் அரச அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலமைதாங்கிய அரசாங்க அதிபர் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸார் பெரும்பாலான குற்றங்களை கண்டம் காணாததும் போல் விட்டு விடுகின்றார்கள். இவற்றினை அவதானிக்கும் பொது மக்கள் பொலிஸாருக்கம் குற்றவாளிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக என்னுகின்றார்கள்.
இதனால் குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தால் அது அவ்விடயம் தொடர்பாக குற்றவாளிடம் பொலிஸார் தெரிவித்து விடுவார்கள் என்று நினைக்கின்றார்கள். இது போன்ற சம்பவங்கள் சில இங்கு நடந்தும் இருக்கின்றது.
இதனால் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படும் கொள்ளை, வாள்வெட்டுச் சம்பவங்களினால் அச்சத்தில் உள்ள பொது மக்கள் மாலை 6 மணியுடன் வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டு அச்சத்துடன் இரவுப் பொழுதை போக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலமை மாற்றப்பட வேண்டும் என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: