யானை – மனித மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய  நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தகப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரகாசமான ஒளி அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரான் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி திட்டங்கள் அனுராதபுரம் புத்தளம் அம்பாறை மற்றும் யானை மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வன ஜீவராசிகள் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா பணியாளர் ஆட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்ரா பவானி ஆராய்ச்சி –

வனவளத்தை பாதுகாப்பதே வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாகும் நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் திணைக்களத்தின் செயல்பாடுகள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு அமைய வனப்பகுதிகளை அறிவித்து வாழும் மக்களின் பாதுகாப்பிற்கான உதவிகளை வழங்க எதிர்பார்த்து உள்ளோம்.

மேலும் வன வளம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுப்பதாக அமையும் பட்சத்தில் மக்கள் பணத்தை பாதுகாப்பார் வனப்பகுதிகளின் எல்லைகளில் வாழும் மக்கள் வனத்தில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய மூலப் பொருட்கள் பல உள்ளன சுற்றுச்சூழலில் இருக்கும் மூலப் பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் பெரும்பலமானவற்றை  ஈட்டிக் கொள்ள முடியும்

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29 வீதமாக காணப்படும் வளங்களைக் கொண்டு முழுமையாக பயனடைவதற்கும் பாதிக்கப்பட்ட வளங்களினை பாதுகாப்புக்காக புதிய மரங்களின் நடுகை செய்யவும் நடவடிக்கை எடுப்போம். நாட்டிலுள்ள வனவளத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கு அவசியமான மரக்கன்றுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: