டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்!

Monday, March 20th, 2017

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில் 500 உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன.

இந்த உதவியாளர்கள் மேல் மாகாணத்தில் கடமையில் ஈடுபடுவார்கள்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில், ஆயிரத்து 500 உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.. ஏனைய ஆயிரம் பேர் பிரதேச மட்டத்தில் நியமிக்கப்படவுள்ளனர். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக தேசிய ரீதியில் சட்டரீதியிலான பணியகம் ஒன்று அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related posts: