இந்திரஜித் குமாரசுவாமி இன்று முன்னிலையாவார்!

Thursday, July 7th, 2016

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி கோப் குழு முன்பாக இன்று வியாழக்கிழமை முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சையை கிளப்பியுள்ள மத்திய வங்கியின் பிணை, முறி விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே மத்திய வங்கியின் ஆளுநர் இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார்.

கோப்குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு துணைக்குழு இன்று பிற்பகல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது. கோப் குழுவின் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தபோது, மத்திய வங்கியின் உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கென முடிவு செய்யப்பட்டது. அதன்போது மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன் கடமையாற்றியிருந்தார்.

எவ்வாறாயினும் மத்திய வங்கியின் ஆளுநரிடம் விசாரணை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய ஆளுநரிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

Related posts: