குடாநாடு முழுவதும் மலேரியா ஒழிப்புப் பணிகளுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வருகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தொடருந்து நிலையத்திற்கு அருகே 9 கிணறுகளில் மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனங் காணப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் எமக்கு முறையிடப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக அவதானிக்கப்பட்டுள்ளது. மலேரியாத் தொற்றை ஏற்படுத்தும் நுளம்பினம் வல்வெட்டித்துறையில் அவதானிக்கப்பட்டது. தற்போது கல்வியங்காடு, கோப்பாய் பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளன.
இதனாலேயே மாவட்டம் முழுவதும் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. மலேரியாவை ஒழிக்கும் பணிகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இதற்கமைய ஒழிப்பு நடவடிக்கைக்கான பணிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். வல்வெட்டித்துறையில் மலேரியா நுளம்பு உள்ளதென இனங்காணப்பட்ட வீடு மருத்துவரொருவருடையது என்று சுகாதாரத் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|