கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நால்வரையும் விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

Friday, May 26th, 2017

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுவிக்குமாறு தெரிவித்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று வியாழக்கிழமை(25)  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம்  நடாத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல்-12.30 மணி முதல் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் ‘மனிதாபிமானத்துடன் வேலையற்ற பட்டதாரிகளை விடுதலை செய்க!’ , ‘எங்கள் பிள்ளைகள் பட்டம் பெற்றது சிறைவாசம் அனுபவிக்கவா?’  உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts:

மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி - தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ...
நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் த...