குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி – தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ஆரம்பம் என லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022

குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓமான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு அவசியமான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இலங்கையின் சமையல் எரிவாயு கேள்வியில் 70 சதவீதமானவை குறித்த நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தந்திற்கு அமைய, ஒரு வருட காலத்திற்காக இலங்கைக்கு 3 இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்ப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: