கிரிக்கெட் போட்டிகளில் வன்முறைகள் தோன்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிபதி இளஞ்செழியன்

“கிரிக்கெட் போட்டிகள் அதற்குரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும். போட்டிகளில் வன்முறைகள் இடம்பெற அனுமதிக்க முடியாது” என மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110 ஆவது வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை (10) ஆரம்பமாகியபோது, அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் கொலை நடந்துள்ளது. இவ்வாறான சம்பவங்களை கிரிக்கெட் போட்டிகளில் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு கல்லூரி அதிபர்களின் வழிநடத்தலில் போட்டிகள் சீரான முறையில் நடைபெற வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள்.
கிரிக்கெட் போட்டியென்பதற்கு தனியான கௌரவம் உள்ளது. அதற்கு ஏற்றவகையில் இந்தப் போட்டியானது நடைபெறவேண்டும்” என்றார்
Related posts:
|
|