கிராமிய அபிவிருத்தி திட்டத்தில் மாற்றங்கள்!

Monday, January 23rd, 2017

 

கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்புத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் மாசி மாதத்திற்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை காலமும்  கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா இந்தத் திட்டத்திற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை சரி அரைவாசியாக இந்த ஆண்டு குறைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்புத் திட்டத்திற்கு 5 லட்சம் ரூபா ஒதுக்கப்படும். இதில் 70 சதவீதமான நிதியில் கிராமியப் பொளதிக உட்கட்டுமானத்திற்கு ஒதுக்க வேண்டும். எஞ்சிய 30 சதவீத நிதியே வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட வேண்டும் வாழ்வாதாரத்திற்கு பொருள்கள் வழங்கும்போது 20 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான நிதி தனி நபர் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடாது என்று அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாசி மாத முடிவுக்கு முன்னர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும், பங்குனி மாத முடிவுக்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்குப் பின்னரான முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் வேலைத்திட்டங்கள் யாவும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் நிறைவுறுத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

gov2

Related posts: