கீரிமலை சித்தர்களின் சமாதி ஆலயத்தில் இலிங்கோற்பவர் மூர்த்தம் பிரதிஷ்டை! 

Wednesday, August 3rd, 2016

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில் குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்கோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு நேற்றுமன்தினம் (01) செந்தமிழ் அர்ச்சகர்களால் குடமுழுக்குச் செய்து வைக்கப்பட்டது.

குழந்தைவேல் சித்தர் உள்ளிட்ட சித்தர்கள் வாழ்ந்து, அவர்களின் சமாதிகள் அமைந்துள்ள இடத்தில், தமிழர்களின் தொன்மங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் குழந்தைவேல் சுவாமிகள் சிவாலய நிர்வாகம் மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஆகியோரால் மேற்படி இலிங்கோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசைக்கு பிதிர்க்கடன் ஆற்ற கீரிமலைக்கு வருகின்ற அடியவர்கள் தமது உறவினரை நினைத்து கடல் தீர்த்தத்தை குடத்தில் எடுத்து வந்து நேரடியாகவே இலிங்கோற்பவருக்கு அபிடேகம் செய்யும் வகையில் வட இந்தியாவின் காசியில் உள்ளதைப் போன்று இந்தச் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(02) பிதிர்க்கடன் செய்வதற்காகக் கீரிமலைக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவலிங்கப் பெருமானுக்கு கடல் தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடந்த 6 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ...
ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவி...
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்து...