அலுவலகம் புகுந்து நல்லூர் பிரதேச சபையின் அதிகாரியைத்  தாக்கிய ஆசாமி மீது கடும் நடவடிக்கை வேண்டும்: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Thursday, October 20th, 2016

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(18-10-2016) யாழ், நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஆசாமியொருவர் சபையின் உப அலுவலகப் பொறுப்பதிகாரி மீது கடும் தாக்கியதுடன், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையையும் கண்டித்து இன்று வியாழக்கிழமை காலை-09 மணி முதல் 11 மணி வரை நல்லூர் பிரதேச சபை மற்றும், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உப அலுவலகங்களின் அனைத்து உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் இணைந்து அடையாளப் பணிப் புறக்கணிப்பு, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்குவிலில் அமைந்துள்ள சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகக்  கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும், இரு மணி நேரப் பணிப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  ‘அரச அலுவலகர்களைத் தாக்கும் சட்டம் எங்கு உள்ளது?’,  ‘கைது செய் கைது செய் தாக்கியவரைக் கைது செய்!’  போன்ற பல்வேறு பாதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed

Related posts: