கால் போத்தல் மதுபானம் தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு – சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர !
Wednesday, September 2nd, 2020
கால் போத்தல் மதுபானத்தை தடை செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் சந்தித்த பின்னர் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயன்படுத்தப்பட்டபின் போத்தல்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான பொறுப்பை ஏற்க உற்பத்தியாளர்களிடம் கேட்கப்படும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால், கால் போத்தல் மதுபானத்தின் பயன்பாடு தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக பொலித்தீன் பக்கட்டுகளை தடை செய்வதற்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்...
பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் - ஆளுநர் விசேட அறிவிப்பு!
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் - நிதியமைச்சு நடவட...
|
|
|


