கான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர்
 Tuesday, May 16th, 2017
        
                    Tuesday, May 16th, 2017
            யாழ். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகரொருவர் கான்ஸ்டபிளொருவரால் தான் தாக்குதலுக்குள்ளானதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பணி நிமிர்த்தம் குறித்த இருவருக்குமிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர். இதனையடுத்துத் தற்செயலாக இருவரும் சந்தித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாகப் பொலிஸ் பரிசோதகரைச் சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் தடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாகக் கான்ஸ்டபிளுக்கு எதிராக பொலிஸ் பரிசோதகரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        