யாழ்ப்பாணத்தில் தொடரும் கனமழை குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு!

Saturday, December 5th, 2020

புரவி புயல் இலங்கையை கடந்து சென்றிருந்தபோதிலும் நாட்டில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் தொடர்ந்தும் கனமழை பெய்துவருகின்றது.

நாடளாவிய ரீதியில் பரவலாக மழை பெய்து வரும் கனமழையால் குறிப்பாக வடக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட இடங்களில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல கடைகள் மற்றும் வீடுகளிலுள் வெள்ளநீர் புகுந்துள்ளதுட்ன மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புரவி புயல்காற்றினைத் தொடர்ந்து நெடுந்தீவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மழை வெள்ளமும் இன்னும் வடிந்தோடமுடியாதுள்ளது. மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்றையதினம் தொடாச்சியான மழையுடன் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன

ஏற்கனவே பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு இன்றையதினம் போக்குவரத்திற்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த போதும் காலநிலயையையும் மக்கள் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: