உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவிப்பு!

Friday, August 6th, 2021

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் காரணமாக சினாபோர்ம் தடுப்பூசியின் உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள போதிலும், முன்னதாக திட்டமிட்டபடி சீனாவினால் இலங்கைக்கான மேலும் நான்கு மில்லியன் தடுப்பூசிகளை இவ்வாரம் வழங்கும் என்று உறுதிபடுத்தியுள்ளது.

அதன்படி 2.14 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இன்றையதினமும், 1.86 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வரும் ஞாயிறு அன்றும் இலங்கை வந்தடையும் என்பதை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 72 சதவீதமானவை சினாபோர்ம் தடுப்பூசிகளாகும்.

கடந்த மார்ச் 31 ஆம் திகதியன்று 06 இலட்சம் தடுப்பூசிகளும், மே மாதம் 26 ஆம் திகதியன்று 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், கடந்த மாத இறுதிப் பகுதியில் வழங்கப்பட்ட 16 இலட்சம் தடுப்பூசிகளுடன் மொத்தமாக 27 இலட்சம் சினாபோர்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு சீன அரசு அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: