தண்டப்பணம் செலுத்தவதற்கான கால எல்லை நீடிப்பு!

Wednesday, July 6th, 2016

போக்குவரத்து விதிகளை மீறும், அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்துவோருக்கு எதிராக போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் 30 நாள்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பிரதிபொலிஸ்மா அதிபர் ஜீ.டீ.ஏ.சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது 14 நாட்களே வழங்கப்படுவதாகவும், அதனை 30 நாட்களாக அதிகரிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலிருந்து புறக்கோட்டை வரை பஸ்கள் பயணிப்பதற்கு தனியான பாதை ஒன்றையும் ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விபத்துக்களின்போது காயங்களை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்குசேதம் விளைவிக்கும் சாரதி ஒருவர், தமது தண்டப்பணத்தை தாம் விரும்பிய நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் பிரசன்னமாகாது, பதிவாளரிடம் செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் குற்றங்களை தடுப்பதற்காக அனைத்து நகரங்களிலும் சீ.சீ.டிவி கமராக்கள்பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து ச...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...