கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்!

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி சரிந்து மரணமடைந்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சாமுவேல் திருக்குமரன் (வயது 34) மயங்கி சரிந்து மரணமடைந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Related posts:
தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் - சீனத் தூதுவர்!
|
|