கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த குபேந்திரராஜா கீர்த்தனா (வயது 24) எனும் பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்கிய நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் இருந்த வேளை கணவனே கத்தியால் குத்தியதாகவும் தற்போது கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கிராம பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி!
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலு...
பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச...
|
|