ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, May 19th, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றையதினம் மட்டும் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனையின் பிரகாரம் நாடுமுழுவதும் நிடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்ட காலத்தில் 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 668 வாகனங்களும் இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 488 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: